C. Vetrivel/சி. வெற்றிவேல்
Tehran Files/டெஹ்ரான் ஃபைல்ஸ் -C. Vetrivel/சி. வெற்றிவேல்
- In stock, ready to ship
Book details
- Author
- C. Vetrivel/சி. வெற்றிவேல்
- Publisher
- Zero Degree Publishing
- Genre
- Non-Fiction
- Language
- Tamil
- Format
- Book
- Availability
- In stock
உலகப் போரின் விளிம்பில் ஒரு நிழல் யுத்தம்!
ஒருகாலத்தில் ரகசியக் காதலர்களாகக் கைகோர்த்த இஸ்ரேலும் ஈரானும், இன்று மூன்றாம் உலகப் போரின் விளிம்பில் நேருக்கு நேர் நின்று ஒருவரையொருவர் அழிக்கத் துடிப்பது ஏன்?
பாலைவனத்தின் அடியில் பாய்ந்த ரகசிய எண்ணெய் நதி, உளவுத்துறைகளின் இருட்டறை ஒப்பந்தங்கள், ‘ஸ்டக்ஸ்நெட்' வைரஸ், ஏஐ இயந்திரத் துப்பாக்கிக் கொலைகள், பல பத்தாண்டுகளாக வளர்க்கப்பட்ட ஹிஸ்புல்லா, ஹமாஸ் பினாமிப் படைகள்... என 70 ஆண்டுகால ‘நிழல் யுத்தத்தின்' குருதி தோய்ந்த ஆவணம் இந்த ‘டெஹ்ரான் ஃபைல்ஸ்’.
எல்லைகள் தாண்டிய படுகொலைகள், பல பில்லியன் டாலர் சைபர் ஆயுதங்கள், உலகப் பொருளாதாரத்தை முடக்கும் கடல்வழிப் போர்கள் என இஸ்ரேல் - ஈரான் இடையேயான இந்தப் போர் வெறும் மத்திய கிழக்கிற்கானதல்ல; ஒட்டுமொத்த மனித குலத்தின் அமைதிக்கான மாபெரும் அச்சுறுத்தல். அறம், நியாயம் என்பதைத் தாண்டி, அரசுகள் தங்கள் இருப்பைத் தக்கவைக்க எந்த எல்லைக்கும் செல்லும் என்ற சர்வதேச யதார்த்தத்தை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்கிறது இந்நூல்.
பக்கங்களைத் திருப்புங்கள்...
உலக அரசியலின் இருண்ட பக்கங்களுக்குள் நுழையுங்கள்!
About the author
This Zero Degree title is by C. Vetrivel/சி. வெற்றிவேல்.
View books by C. Vetrivel/சி. வெற்றிவேல்- C. Vetrivel/சி. வெற்றிவேல்
- IRAN ISRAEL WAR
- Non-Fiction
- Tamil
- ZDP Specifics
