Alli Fathima /அல்லி பாத்திமா
IPPADIKKU UNADHU NAAN/இப்படிக்கு உனது நான்
- In stock, ready to ship
Book details
- Author
- Alli Fathima /அல்லி பாத்திமா
- Publisher
- Zero Degree Publishing
- Imprint
- piragu
- Genre
- Literature and Fiction
- Language
- Tamil
- Format
- Book
- Availability
- In stock
‘இத்தொகுப்பின் அனைத்துக் கவிதைகளிலும், இயற்கையின் அழகழகான அத்தனை காட்சிகளும் ஏதோ ஒரு வகையில் மிகச் சிறப்பாக இடம் பெற்று அவற்றைப் படிக்கிற நம்மைப் பெருமளவில் நெகிழ்த்தி விடுகின்றன. தனது இணையின் நினைவுகளோடு சேர்த்து இயற்கையைக் கலந்து கொடுத்து இருக்கின்ற இந்தப் பாங்கு சங்க இலக்கியத்தின் உயர்தரத்தில் ஆனது. நீங்கள் இத்தொகுப்பின் கடிதக் கவிதைகளுக்குள் பயணிக்கலாம். இக்கவிதைகளின் வாயிலாக மறக்க முடியாததும், மகிழ்ச்சிக்கு உரியதும், உயரியதுமான ஓர் இனிய அனுபவத்தை நிச்சயமாக நீங்கள் பெறுவீர்கள்.’
- கவிஞர் ஜெயபாஸ்கரன்
‘இப்படிக்கு உனது நான்!’ கடிதக் கவிதைகளை வாசிக்கும் காதலர்கள் அதில் தங்கள் காதலை நிச்சயமாக உணர்வார்கள். இந்தக் கடிதக் கவிதைத் தொகுப்பில் தலைவி இயற்கையோடு தன்னைப் பிணைத்துக் கொள்கிறாள். காதல் உணர்வுகளை, மகிழ்ந்திருந்த இன்பப் பொழுதுகளை எண்ணிப் பிரிவின் வலிகளோடு வெளிப்படுத்துகிறாள்.
பொதுவாக காதலர் தினத்தன்று காதலர்கள்தான் மலர்களால் பரிசளித்துக்கொள்வார்கள். காதலர் தினத்தன்று இந்த நூலை வெளியிடுவதன் மூலம் கவிஞர் அல்லி பாத்திமா காதலர் தினத்திற்கே கவிதை மலர்களைப் பரிசளித்துள்ளார்.
- திரைப்பட இயக்குநர் எம். அன்பழகன்
About the author
Zero Degree currently lists 3 books by Alli Fathima /அல்லி பாத்திமா.
View books by Alli Fathima /அல்லி பாத்திமா- Alli Fathima /அல்லி பாத்திமா
- Literature and Fiction
- piragu
- Poetry
- Tamil
